கோவையில் முதலமைச்சர்‌ தலைமையில் தொழில்‌ முனைவோர்‌ உடனான சிறப்பு கலந்துரையாடல்‌ கூட்டம்: ITF-வரவேற்பு..!

முதல்வர்‌ உற்பத்தித்துறைக்கு உரிய கவனமும்‌, முக்கியத்துவமும்‌ தொடர்ந்து தரப்படும்‌ என்று உறுதி அளித்துள்ளதாக இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் முதலமைச்சர்‌ தலைமையில்‌ நடைபெற்ற தொழில்‌ முனைவோர்‌ உடனான சிறப்பு கலந்துரையாடல்‌ கூட்டம் நடைப்பெற்றது.

இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியுள்ளதாவது:-

முதலமைச்சர்‌ தலைமையில்‌ நடைபெற்ற தொழில்‌ முனைவோர்‌ உடனான சிறப்பு கலந்துரையாடல்‌ கூட்டம்‌ மிகவும்‌ வரவேற்கத்தக்க முயற்சி ஆகும்‌ இந்த கூட்டம்‌, தமிழக ஜவுளித்‌ துறையின்‌ வாய்ப்புகள்‌ மற்றும்‌ சவால்கள்‌ பற்றிய விளக்கங்களை கூற வாய்ப்பாக அமைந்தது.

சைனா பிளஸ்‌1 என்ற கொள்கையின்‌ அடிப்படையில்‌ வரும்‌ ஏற்றுமதி ஆர்டர்களை கையாளும்‌ வகையில்‌, SME நிறுவனங்களுக்கு TN State PLI Scheme for Textile & Apparel sector (உற்பத்தி சார்ந்த சலுகைத்‌ திட்டம்‌) திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்கும்‌ படி கேட்டுக்‌ கொண்டோம்‌.

இந்தத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டால்‌ தமிழக சிறு மற்றும்‌ நடுத்தர ஜவுளி நிறுவனங்கள்‌ புது முதலீடுகளை செய்து தங்களது போட்டித்‌ திறனை அதிகரிக்க முடியும்‌. அரசு செலவிடும்‌ சலுகை தொகைக்கான உடனடி பலன்‌ வரி வருவாய்‌, புது வேலை வாய்ப்புகள்‌ மற்றும்‌ ஏற்றுமதி உயர்வு மூலம்‌ கிடைக்கும்‌.

மேலும்‌ திட்ட சலுகை காலம்‌ முடிந்த பின்னரும்‌, இந்த உற்பத்தி கட்டமைப்புகள்‌ பல ஆண்டுகளுக்கு உற்பத்தியையும்‌, வேலை வாய்ப்பையும்‌ வழங்கும்‌. இந்தத்‌ திட்டம்‌ பற்றி விரிவான அறிக்கைகளை ITF அமைப்பு சார்பில்‌ அளிக்க அனுமதிக்கும் படி கேட்டுக்‌ கொண்டோம்‌.

இந்த மாநில PLI திட்டம்‌ மூலம்‌ புதிதாக ரூபாய்‌ 15000 கோடி ஏற்றுமதியையும்‌ 3 லட்சம்‌ வேலை வாய்ப்புகளையும்‌ அடுத்த 5 ஆண்டுகளில்‌ உருவாக்கவும்‌ வாய்ப்பு உள்ளது.

தமிழக அரசு பல்வேறு உற்பத்துத்துறை சார்ந்த ஊக்கத்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமும்‌ செயல்படுத்தபட்டால்‌, அது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்‌.

முதல்வர்‌ உற்பத்தித்துறைக்கு உரிய கவனமும்‌, முக்கியத்துவமும்‌ தொடர்ந்து தரப்படும்‌ என்று உறுதி அளித்ததோடு, நிறுவனங்கள்‌ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துவதில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌.

இவ்வாறு இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியுள்ளார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...