கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைகள் ரூ.87.30 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் இத்திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அம்மா உணவக திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது.



பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் பொதுமக்கள் அதிகமாக கூடும் 12 முக்கிய இடங்களில் இந்த உணவகங்கள் அமைந்துள்ளன.

சிங்காநல்லூர், மசக்காளிபாளையம், பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலைய வளாகம், சரவணம்பட்டி, மணியகாரம்பாளையம், குனியமுத்தூர், கோவைபுதூர், குறிச்சி, இராமநாதபுரம், திருமால்வீதி மற்றும் கோவை அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

2026-ஆம் ஆண்டு மே, ஜூன் மற்றும் ஜுலை ஆகிய மூன்று மாதங்களில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 11,39,253 எண்ணிக்கையிலான உணவு வகைகள் ரூ.87,30,970 மதிப்பில் விற்கப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த உணவகங்களில் உணவு உட்கொண்டு செல்கின்றனர். குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் உழைக்கும் மக்களிடம் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உணவகங்களின் தரம் மற்றும் சுகாதாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...