கோவை தொண்டாமுத்தூரில் சாலையோர பள்ளத்தில் விழுந்த சினைமாடு - தீயணைப்பு துறையினர் மீட்பு…!

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டு நடந்து வந்த சினைமாடு, அங்கு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.


கோவை: கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான சினைமாடு ஒன்று, நேற்று மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அப்போது, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டு நடந்து வந்த சினைமாடு, அங்கு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.

இதில், காலில் காயத்துடன் சிக்கிய மாடு வலியில் சத்தமிட்டது. அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் பள்ளத்தில் எட்டிப்பார்த்த போது, சினைமாடு பள்ளத்திற்குள் விழுந்தது தெரியவந்தது. பின்னர், அந்த மட்டை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் இறங்கி கயிறு மூலம், மாட்டின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலமாக கட்டி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். பள்ளத்தில் விழுந்ததால் பதற்றத்தில் இருந்த மாட்டுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாட்டுக்கு தேவைப்படும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...