கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் - இளைஞர் மீது வழக்கு பதிவு!

கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் இளைஞர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகள் வெங்கடலட்சுமி (19). இவர் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (22) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் வெங்கடலட்சுமி, பாலமுருகன் உடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகன் பலமுறை வெங்கடலட்சுமியை தொடர்பு கொள்ள முயன்று அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வெளியே வந்த வெங்கடலட்சுமியை, பாலமுருகன் வழிமறித்து உள்ளார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்யுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பாலமுருகன் வெங்கடலட்சுமியை சரமாரியாக தாக்க துவங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். பின்னர் இதுகுறித்து வெங்கடலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...