கோவை மதுக்கரையில் தனியார் பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து….!

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உள்ளே இருந்த பொருட்கள்தீயில் கருகி நாசமானது.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தைப் பார்த்தஅங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



இதையடுத்து, கோவைப்புதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.



சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...