கோவை ஆலந்துறை அருகே அரசு பேருந்து - இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து; இளைஞர் பலி…!

ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.


கோவை: கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (26). தொழிலாளி. இவர் தனது நண்பரான, ஆலந்துறையை சேர்ந்த சபரி கணேஷ் (29) என்பவருடன் சிறுவாணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.



அப்போது, ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த (59 எண்) அரசு பேருந்து மீது மோதியது.



விபத்தில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சபரி கணேஷ் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் அசோக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...