கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல்: வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பல்லடம் அருகே கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உத்தர பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில் ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், மசூதியில் கள ஆய்வு செய்ய கோரியும் வாரணாசி நீதிமன்றத்தில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

இதன் மூலம் வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு தலைமையில் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...