கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது..!

போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9-வயது மகள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.

அந்த சிறுமி எடுத்துக் கொடுத்தார். அப்போது அந்த இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் திரண்டதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், அன்று மாலையே அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தம்பதியரின் 5-வயது மகளுக்கும் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதே போல் சிறுமி கூச்சல் போட்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக இரு சிறுமிகளின் பெற்றோரும் பேரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் ஒரே நபர் என்பதும், அவர் தொண்டாமுத்தூரில் உள்ள வஞ்சியம்மன் நகரைச் சேர்ந்த நஜிமுல் இஸ்லாம்(23) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வீட்டருகே பதுங்கியிருந்த நஜிமுல் இஸ்லாமை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...