கோவையில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12-சவரன் நகை திருட்டு - போலீசார் விசாரணை..!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12-சவரன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் (YES BANK) மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரபு கடந்த 13-ஆம் தேதி தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த நிலையில், நேற்று மீண்டும் இரவு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12-சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்துபிரபுதுடியலூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர். மேலும், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...