கோவையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி: 4-பேர் ஒரே இரு சக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற போது விபரீதம்…!

இதில், படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் கோவை அன்டக்காபாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மணிகண்டன் நேற்று இரவு தனது நண்பர்களான ராகவன் (24), கவியரசு (20), கவுதன் (24) ஆகிய மூன்று பேரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, 4-பேரும் ஒரே வாகனத்தில் வெள்ளானப்பட்டி - காளப்பட்டி சாலையில், காளப்பட்டி சந்தைக்கு சென்றுள்ளனர்.

அப்போது செக்கான் தோட்டம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே கார் வந்ததால் நிலைதடுமாறி, இடது சென்ற லாரியின் மீது மோதி சாலையில் விழுந்தனர்.



இதில், படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து, அங்கு வந்த கோவில்பாளையம் போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...