தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம் எனவே, ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கி பிடிப்போம் என தெரிவித்தார்.
கோவை:காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் "திராவிட மாடல் தான் தேசிய மாடல்" என்ற தலைப்பில்பயிலரங்கம் நடைபெற்றது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் அ.ராசா, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பேசிய, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசுகையில், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது எனவும் இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் போது ஆட்சி பணியில் சிறப்பாக இருப்பார் என்பதை நான் அறிவேன் என்றும், திராவிடத்தை காப்பாற்ற கடவுள் நம்பிக்கை உள்ள செந்தில் பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
பூனாவில் கருத்தரங்கிற்கு நான் சென்றபோது பைலட் செல்ஃபி எடுக்கமுற்பட்டார் அப்போது அவரிடம் விசாரித்த போது, அதற்கு பைலட் 2-ஜி என என்னை தெரிவித்தார் என கூறிய அவர் அது என்னை எங்கே வரை கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா என நகைச்சுவைத்தார்.
வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவது தான் ஆரிய மாடல் எனவும், வருணாசிரமத்தை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள் எனவும் கூறினார்.
கல்வியை மறுத்த மதம் சனாதன மதம்இந்து என்ற பெயரைக் கொடுத்தது ஆங்கிலேயர்கள் எனவும் தெரிவித்தார். பெண்களை வீட்டில் இருக்க சொன்னவர்கள் ஆரியர்கள் சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயன்றவர்கள் ஆரியர்கள்அதை நேருவும் அம்பேத்கரும் உடைத்தனர் என கூறினார்.
பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம் எனவும், ஆரிய மாடலையும் திராவிட மாடலையும் கவனித்து பாருங்கள் பெரியாரின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல பெண்ணியம், சாதி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் பங்கு என தெரிவித்தார்.
சனாதனத்தை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டனர் எனவும், அதுவே சேரிகளாக மாறியது எனவும் தெரிவித்தார். 1996-ஆம் ஆண்டில் கலைஞர் சமத்துவபுரத்தை உருவாக்கினார் என கூறியவர் செவிடன் குருடன் நொண்டி என அழைக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளி என அழைக்கப்பட்டனர்.
இது கலைஞர் ஆட்சியில் நடைபெற்றது, அதே சமயத்தில் தான் அலி அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இது திராவிட ஆட்சியில் நடந்தது என தெரிவித்தார். இருளர் சமுதாயத்தை தேடிச்சென்று உதவியவர் முதல்வர் ஸ்டாலின் எனவும் இதுதான் திராவிட மாடல் எனவும் தெரிவித்தார்.
காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல எனவும் அதுவும் திராவிடம் தான் என தெரிவித்தார். எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்படிப்பார்கள் என பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல் என கூறினார்.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம் எனவே, ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கி பிடிப்போம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.