தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த தமிழக அரசு உத்தரவு: தொழில் துறையினர் அதிர்ச்சி..!

காற்று நன்றாக வீசி வரும் நிலையில் தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடை காலத்தில் தினசரி மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ள நிலையில், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது, தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு காற்றாலை நிறுத்தி வைக்க (Grid Curtailment) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-

இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மின் தடை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. தினசரி மின் நுகர்வு 17 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் 30 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன.

காற்று நன்றாக வீசி வரும் நிலையில், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொழில்துறையினர் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்து தரும் காற்றாலைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தின் தேவை போக அதிகமுள்ள மின்சாரத்தை பிற துறைகள் அல்லது பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யலாம். கடந்த வாரம் ஒருநாள் தேவை போக அதிகம் இருந்த மின்சாரத்தை 4.5 லட்சம் யூனிட் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விற்பனை செய்து வருவாய் ஈட்டி உள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் அதிகமாக வீசும் காற்றை பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பெற்று தமிழக தேவை போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நல்ல முறையில் வருவாய் ஈட்ட முடியும்.

காற்றாலைகளை நிறுத்தி வைப்பது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...