கோவையில் ஒன்பது லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் திட்டம் தயார்!

கோவையில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டத்தின் முக்கிய அம்சமாக, இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் 'சிட்டி கேட் ஸ்டேஷன்' கட்டுமானப் பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது.


கோவை:கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பணியை மேற்கொள்கிறது. இதற்காக, கோவை மாவட்டத்தில், 230 கி.மீ.,க்கு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.

இதுவரை 65 கி.மீ.க்கு பணி முடிவடைந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதிகளில், வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டம் தொடங்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றைத் தவிர்த்து, மாவட்டத்தில் வாகன எரிவாயு விநியோகிப்பதற்கு 273 சி.என்.ஜி. ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டுள்ளன.

இருப்பு மையம் திறப்பு இவை அனைத்துக்குமான இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் மையமான 'சிட்டி கேட் ஸ்டேஷன்' மற்றும் 'மதர் ஸ்டேஷன்', கோவை, பிச்சனூரில் கட்டப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு தேவை இந்த மையம், ஒரு மணி நேரத்துக்கு 13 ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு கையாளும் திறன் கொண்டது. வரும் 2025 வரையிலான கோவையின் இயற்கை எரிவாயு தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த மையத்துக்கு கொச்சி முனையத்தில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. பிச்சனூரில் அமைந்துள்ள 'சிட்டி கேட் ஸ்டேஷன்' இயற்கை எரிவாயு இருப்பு மையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (பைப்லைன்ஸ்) நானாவேர் திறந்து வைத்தார்.

அடுத்த ஆண்டுக்குள் 41 மையங்கள்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு, இந்த இருப்பு மையம் உதவும். அடுத்த ஆண்டுக்குள் கோவையில் 41 இயற்கை எரிவாயு விநியோக மையங்கள் துவக்கப்படும். வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு பரவலாக கிடைக்கவும், விலையை மேலும் குறைக்கவும், கூடுதலாக ஆன்லைன் சி.என்.ஜி., ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

எரிவாயு விலை குறையும்!

கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, காஸ் விலை குறையும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். கோவையில் தற்போது எரிவாயு இருப்பு மையம் (சிட்டி கேட் ஸ்டேஷன்) திறக்கப்பட்ட நிலையில், இயற்கை எரிவாயுவின் விலை ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது (ஒரு கிலோ ரூ.79.17) என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...