கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் கார் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், காரில் வந்தவர்களுக்கு எந்த விபத்தும் ஏற்படாமல் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவை:கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர்கிருஷ்ணன். இவர் தனது உறவினர்களை அழைப்பதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு வந்து, உறவினர்களை அழைத்து கொண்டு மீண்டும் சென்ற போது ஆட்சியர் அலுவலகம் முன்பு திரும்பும்போது காரை ஓட்டிய கிருஷ்ணனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

அப்போது இடது கையால் திருப்பும் போது நிலை தடுமாறி சாலை தடுப்பு சுவர் மேல் மோதியது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காரில் வந்தவர்களை பத்திரமாக மீட்டு வேறு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மீட்பு வாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.