கோவை வார்டு 26: மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியின் ஆலோசனையின்படி தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது!

கோவை மாநகராட்சி வார்டு 26 க்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியின் ஆலோசனையின் பேரில் சாக்கடை தூர்வாரும் பணியும், சாலையோரம் சுத்தம் செய்யும் பணியும் சிறப்பாக நடந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு 26 தூய்மைப் பணியாளர் அலுவலகத்தில் இன்று காலை மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



இதில், கடந்த இரண்டு நாட்களாக வார்டுக்கு உட்பட்ட அவிநாசி ரோடு பகுதியில் புல், செடி கொடிகள் வெட்டி சாலையோரம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.



ஆதலால் தெருக்களுக்குள் பணியாளர்கள் செல்லவில்லை. ஆகவே இன்று வீடுகளில் குப்பை வாங்க பணிகளும், சாக்கடைகள் அள்ளும் பணிகள் துரிதமாக நடத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வார்டு எண் 26 பி கே டி நகர் பகுதியில் சாக்கடை இல்லாத பகுதியில் அப்பகுதி மக்கள் சாக்கடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை உடனடியாக கோவை மாநகராட்சி மேயர், கோவை மாநகராட்சி ஆணையர், வடக்கு மண்டல தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி உறுதியளித்தார்.



மாமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டதன் பேரில் வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி கருப்பண்ண கவுண்டர் லே-அவுட் பார்க் சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும், நேரு நகர் 1, 2, 3 பட்டாளம்மன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் சாக்கடை சுத்தம் செய்ய வேண்டிய பணியின் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



இதையடுத்து, இன்று காலை ஸ்ரீ ராம் நகர் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணியும், சிறு செடி கொடிகள் வெட்டும் பணியும் நடைபெற்றது. அப்போது, பயனீர் தியாகு, உதயகுமார் மேற்பார்வையாளர் சிவசாமி ஆகியோர் உடனிருந்தனர்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...