போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.2.65 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குநர்கள், வங்கி மேலாளர் குற்றவாளிகள் - கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.2.65 கோடி வரையில் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குநர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் குற்றவாளிகள் என்று கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: சேலம் மாவட்டம் வீரபாண்டி இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2010 ஆண்டு உயிரி உரங்கள் தயாரிக்கும் சன் பயோ மினியூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.65 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சக்திவேல், மற்றும் விஜயகுமாரி ஆகியோர் விதிகளை மீறி கடன் வாங்கி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அதே போல கடன் வழங்கி நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தியன் வங்கி வீரபாண்டி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியனும் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...