கேரளாவிலிருந்து ரயிலில் தப்பிவந்த குற்றவாளி - கையும், களவுமாக பிடித்து கேரள போலீசிடம் ஒப்படைத்த திருப்பூர் ரயில்வே போலீசார்!

கேரளா மாநிலத்திலிருந்து ரயிலில் தப்பி வந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த திருப்பூர் ரயில்வே போலீசார் அந்த குற்றவாளியை கேரள போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.


திருப்பூர்: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய். திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி ஷினாய், அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரது மனைவி பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறையில் இருந்த இன்று பிற்பகல் தப்பித்த ஷினாய், பாலக்காட்டில் உள்ள ரயில் ரயில் நிலையத்தில் இருந்த போது, கேரளாவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி தப்பித்து உள்ளார்.

இதை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த குழல்மண்ணம் காவல் நிலைய போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். இதனிடையே ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்து சென்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...