தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார்.
கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் பட்டங்களும் வழங்குகின்றனர்.
இந்த விழாவில் பி.எச்டி., பட்டம் பெற்ற 1687-மாணவர்கள், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267-மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தை பெறவுள்ளனர்.
மேலும், 1,504-பேர் எம்.பில்., 1,50,424-பேர் இளநிலை பட்டமும், 48,034-பேர் முதுநிலை பட்டம் என மொத்தம் 2,04,362 மாணவ - மாணவிகள் பட்டங்கள் பெறவுள்ளனர்.
முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் பட்டம் பெற வந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டதால் மாணவியர் மற்றும் உடன் வந்த பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து தெரிவித்த பட்டம் பெற வந்த மாணவியர், பட்டம் பெறுபவருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்ற எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இன்று காலை வந்தவர்களில் பல பேர், பெற்றோர்களை அழைத்து சென்ற நிலையில், கூட்டம் அதிகமாக உள்ளது என்று கூறி, பெற்றோர்களில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்ற திடீர் அறிவிப்பால், மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பட்டம் பெற வந்த மாணவியர் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்கலைக்கழக வாயிலில் காத்திருந்தனர்.
அவர்களில், சிலர் அங்கிருந்த காவலர்களிடம் அனுமதி பெற முயற்சித்த நிலையில், கூட்டம் கூடாமல் இருக்க அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது பிள்ளைகள் பட்டம் பெறுவதை கண் குளிர பார்க்கலாம் என்று வந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வருத்தம்பட தெரிவித்தனர்.