நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் வருகின்ற 16 மற்றும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக எஸ்டிபிஐ கட்சி வர்த்தக பிரிவு தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் கூட்டமைப்பு மற்றும் தொழிற் சங்கங்கள் சார்பாக வருகின்ற 16 மற்றும் 17 ஆம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தொழில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி வர்த்தக பிரிவு திருப்பூர் மாவட்ட தலைவர் பாபு தொழில் கூட்டமைப்பு சார்பில் நடத்த உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை ஏற்றத்தை கவனத்தில் கொண்டு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வழி வகை செய்ய வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தது போல டிரா பேக் டியூட்டி வழங்க வேண்டும்.
மேலும், காட்டனுக்கு மாற்று ஏற்பாடாக பாலிஸ்டர் துணி வகைகளை உற்பத்தி செய்ய சலுகைகள் வழங்குவதோடு அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும், அதன் மூலம் பருத்தி விலை குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை தயாரிப்பதற்கான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.