தமிழக ஆளுநருக்கு எதிராக கோவையில் போஸ்டர்கள் ஒட்டிய 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு..!

தமிழக ஆளுநருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.


கோவை: தமிழக ஆளுநருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கோவையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள, நேற்று கோவை வந்தடைந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை வந்துள்ள ஆளுநருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.



அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் "பாப்புலர் ஃப்ரெண்ட் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரே அவதூறு குற்றச்சாட்டை உடனடியாக திரும்ப பெறு. ஆர்.எஸ்.எஸ் க்கு ஆதரவாக மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தை காட்டாதே. ஒன்றிய அரசே தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பப் பெறு" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



பல்வேறு இடங்கள் ஒட்டப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...