கோவையில் ரயில் மோதி இளைஞர் பலி - தற்கொலை? விபத்தா? ரயில்வே போலீஸ் விசாரணை…!

கோவை போத்தனூர் - மதுக்கரை இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை போத்தனூர் - மதுக்கரை இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்து கிடந்த அந்த இளைஞருக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும், சிவப்பு நிறத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...