'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கோவை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர்

கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுகாதாரக்குழு கூட்டம், தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.



அப்போது கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாநகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. தூய்மை பணியாளர்களின் சிரமங்களை கேட்டறிந்து தூய்மை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல, ஏதாவது ஒரு வார்டில் தினமும் "மாஸ் கிளீனிங்" நடத்தப்பட வேண்டும். பழுதடைந்த குப்பை தொட்டிகளை அகற்றி விட்டு புதிய குப்பைத் தொட்டிகளை வாங்க வேண்டும். மேலும், அடிக்கடி பழுதடையும் வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்க வேண்டும். கட்டிட கழிவுகளில் இருந்து மறுசுழற்சி பொருட்கள் தயாரிப்பதற்கான மையம் கட்ட வேண்டும்.

தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை ஒழிக்க வேண்டும். "மீண்டும் மஞ்சப்பை" திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இக்கூட்டத்தில், மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...