கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொடூர கொலை வழக்கு: மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த வழக்கில், நேற்று ஒரு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றொருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடன் எம்.ஜி.ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழில் தேவைக்காக பொன்னுச்சாமி, ராஜனிடம் கடனாக ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன் ரூ.3 கோடி திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அவர் திரும்ப தர தாமதமானதால் இவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், துடியலூர் அருகே உள்ள பொன்னுச்சாமிக்கு சொந்தமான இடத்தை வாங்க ஒருவர் வந்ததாக கூறி அவரை அழைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொன்னுசாமியை, ராஜன் மற்றும் முத்துக்குமார் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த வழக்கில், இருவரையும் துடியலூர் போலீசார் கைது செய்த நிலையில், கொடூரமாக கொலை செய்து சிறையில் உள்ள ராஜனை நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.



இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் அசோக் குமார் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கியுள்ளார்.

பொன்னுச்சாமி கொலை வழக்கில் தொடர்புடைய ராஜன், அசோக்குமார் இருவரும், தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...