கோவையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!

பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம் பெறுவோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம் பெறுவோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம், நியாய விலை கடை மற்றும் டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாறுதல்கள் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை பவர் ஹவுஸ் பகுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



இதில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் நியாயவிலை கடை ஊழியர்கள் உட்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழக அரசு, அரசு பணியாளர்கள் கோரிக்கை குறித்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். 18 ஆண்டுகளுக்கும் மேலாக பென்சன் திட்டம் போன்றவற்றிற்காக போராடி வருவதாக தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்தார். எனவே பழைய பென்ஷன் திட்டம் பென்சன் இல்லாத பணியாளர்களுக்கு பென்சன் திட்டம் வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு நியாய விலைக் கடை, டாஸ்மாக் கடை பணியாளர்கள் கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் முழு நேரமும் பணியாற்றி வருவதால் அவர்களை பகுதி நேர பணியாளர்கள் என்பதை மாற்றி முழு நேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...