நீண்டநேரம் காத்திருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து வெளியூரிலிருந்து ஓட்டுப் போட வந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணிபுரிந்து வரும் பொதுமக்கள் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வால்பாறை செல்ல பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு பாலக்காடு சாலையில், 300க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்குவந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.