மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சமூக பொறுப்புணர்வு நிதியில் 75 இலட்சம் மதிப்பீட்டில் 500 எல் பி எம் திறனுள்ள பிராணவாயு கலன் (ஆக்சிஜன் பிளான்ட்) பயன்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.



பின்னர் ராசக்காபாளையத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் விழாவில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளில் 39 சாலை மேம்பாட்டு பணிகளுக்கு 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளதாகவும், மேலும் மகளிருக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 2,800 மகளிருக்கு ரூபாய் 21 கோடியே 65 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அரசின் திட்டங்கள் விரைவாக பொது மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...