தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி இன்று (ஆகஸ்ட் 3), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் அரசு விழாவாக ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில், கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ சரத், 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ. கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் கே. சுபாஷ், மாநகரப் பொருளாளர் வடவள்ளி ரவி, மாநகர துணைத் தலைவர் சிக்கன் சின்னத்தம்பி, மாநகரச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநகர துணைச் செயலாளர் கவுண்டம்பாளையம் சீனிவாசன் செய்திருந்தார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஈரோடு மாவட்டம், ஓடநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...