கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.
பின்னர் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்ததில் கிணத்துக்கடவு கே.வி. கே நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது சந்தேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.