திருப்பூரில் மாணவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரம். அரசு பள்ளி தலைமையாசிரியை கைது

தலைமையாசிரியை கீதாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மங்கலம் போலீசார் இன்று அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களை வற்புறுத்தியும், மாணவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரத்தில், அரசு பள்ளி தலைமையாசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையை, மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய பள்ளி தலைமையாசிரியை சொன்னதாகவும், அதை மறுத்த மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்தில், பள்ளி தலைமையாசிரியை கீதாவிடம் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர், தலைமை ஆசிரியர் கீதா மீது திருப்பூர், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், தலைமையாசிரியை கீதா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில், நீதிமன்றம் அறிவுரைப்படி, மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதி சொர்ணம் நடராஜன் விசாரித்தார். இதில், அரசு தரப்பில் முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதாடப்பட்டது.

இந்த நிலையில், தலைமையாசிரியை கீதாவை மங்கலம் போலீசார் இன்று கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...