நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் திமுக சார்பில் மனு அளித்தவர்களிடம் நாளை நேர்காணல்..!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் நாளை மற்றும் 22ம் தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்துகிறார்.


கோவை: கோவையில் தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம், 20 மற்றும் 22ம் தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்துகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், மின்னணு இயந்திரங்களை தயார் செய்து வைத்துள்ளது. அரசியல் கட்சியினரும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 20 மற்றும் 22ம் தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நேர்காணல் நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்த உள்ளார்.

சிங்காநல்லூர், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளுக்கு 20ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, நேர்காணல் நடக்கிறது.

சர்க்கார் சாமக்குளம், இடிகரை, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம் பேரூராட்சி வார்டுகளுக்கும் அன்றைய தினமே நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் 22ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணலில் பங்கேற்க வரும் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் புத்தகத்தை பூர்த்தி செய்து கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...