கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிஸ்கட் வழங்கி வழி அனுப்பி வைத்த இஸ்லாமிய பெண்கள்..!

பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், துண்டு போன்றவைகள் வழங்கி, அவர்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இஸ்லாமிய பெண்கள் பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

கோவை மாநகரில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சம அளவில் வசித்து வருகின்றனர். இதைத்தவிர மூன்றில் ஒரு பங்கு வடமாநிலத்தவர்கள் தொழில் விஷயமாக இங்கே வசித்து வருகின்றனர்.

தொடர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையாகவும் விருப்பமாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்து இந்து பக்தர்கள் மாலை அணிவித்து பாதயாத்திரையாக நேற்றிரவு புறப்பட்டனர்.

இந்த தகவலை அறிந்த கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வசிக்கக்கூடிய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வந்து அந்த வழியாகச் செல்லக்கூடிய அனைத்து பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், துண்டு போன்றவைகள் வழங்கி, அவர்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கும் சமய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...