ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1-கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திராவிலிருந்து தேனி மற்றும் கோவை மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 1-கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 7-பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: ஆந்திராவிலிருந்து தேனி மற்றும் கோவை மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 1-கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 7-பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவிலிருந்து, தேனி மற்றும் கோவை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்ததுடன், அதில் சம்பந்தப்பட்ட, 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய, மூன்று காரும் பறிமுதல் செய்யப்பட்டது,'' என, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறினார்.

இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் - கரூர் புறவழிச்சாலை, முதலைப்பட்டி அருகில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, நாமக்கல் எஸ்.ஐ., முருகன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

விசாரணையில், காரில் இருந்தவர்கள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 49, ஜெயச்சந்திரன், 67, முகேஷ், 29 என்பதும், ஆந்திரா மாநிலத்திலிருந்து, தேனி மாவட்டத்துக்கு, கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 200 கிலோ கஞ்சாவும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் கத்தேரி ஜங்சன் அருகில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடந்த வாகன சோதனையில், அவ்வழியாக வந்த, இரண்டு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

விசாரணையில், கோவை குனியமுத்தூர் கிஷார்குமார், 30, உக்கடம் அப்துல் ஜலீல், 30, முஜீப் ரகுமான், 29, சுல்தான், 29 என்பதும், ஆந்திரா மாநிலத்திலிருந்து கோவைக்கு, கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.



இந்த இரண்டு சோதனையிலும், மொத்தம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த, 2021ல், 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யததுடன், 7 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...