கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த பழனிமுத்து (35) மற்றும் அவரது தந்தை குருநாதன் (60) ஆகிய இருவரை காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு அருகே, தனியார் நிறுவனத்திற்கு அருகிலுள்ள வெற்றிடத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:

சம்பவ இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஜூலை 27ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அந்த வாகனத்தின் பயணத்தை தொடர்ந்து கண்காணித்ததில், அது பொள்ளாச்சியில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் பொள்ளாச்சியைச் சேர்ந்த பழனிமுத்து (35) என்பதும், உயிரிழந்தவர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (30) என்பதும் உறுதி செய்யப்பட்டது.



மேலும், பழனிமுத்துவுக்கும் சங்கீதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததாகவும், கடந்த ஆறு மாதங்களாக சங்கீதா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்த பழனிமுத்து, இதுதொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு கிணத்துக்கடவில் உள்ள தனது வாடகை வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பழனிமுத்து கத்தியால் சங்கீதாவைக் குத்திக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலைக்குப் பின்னர், தனது தந்தை குருநாதன் (60) உதவியுடன், சங்கீதாவின் உடலை போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, சான்றுகளை அழிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

120-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பாராட்டியுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...