கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் வீரமாச்சி அம்மன் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நேற்று இரவு முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று காலை ஸ்ரீ ரங்கநாதனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்தபின் சிறப்பு பூஜைகள் செய்து காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதி சரவணா நகர் ஸ்ரீரங்கநாதர் வீரமாச்சி அம்மன் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



நேற்று இரவு முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று காலை ஸ்ரீ ரங்கநாதனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்தபின் சிறப்பு பூஜைகள் செய்து காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து விண்ணை முட்டும் அளவிற்கு "கோவிந்தா கோவிந்தா" என்று போற்றினர்.



திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் ரங்கநாதர் படுத்துக்கொண்டு அருள்பாலிப்பது போலவே கோவையில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் வீரமாச்சி அம்மன் திருக்கோவிலில் படுத்துக்கொண்டு அருள்பாலிப்பது இந்த கோவிலின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...