போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக ஒரு கும்பல் வாங்கி இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்த நிலையில், ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக ஒரு கும்பல் வாங்கி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை மாநகர பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஊசி மூலமாக உடலில் செலுத்தும்போது போதையின் உச்சத்திற்குச் செல்வார்கள்.
மேலும், இதிலிருந்து வாசனை வராது என்பதால் பெற்றோர்கள் மற்றும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதனை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மாத்திரைகளைச் சட்டவிரோதமாக ஒரு கும்பல் வாங்கி இளைஞர்களைக் குறி வைத்து விற்பனை செய்து வருகின்றன. போதை மாத்திரையை விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தனிப் படைகள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு மாநகரில் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 14 பேரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில், வாலாங்குளம் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தன அதில் ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, போலீஸார் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனைகளை ஒரு போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அவ்விடம் இருந்து 50 போதை மாத்திரைகள் ஊசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரத்தினபுரி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த சதாம் உசேன் வயது 29 என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பியோடிய மாசிலாமணி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.