உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி திறப்பு

உதகை எச்.பி.எப்.(HPF) பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.



நீலகிரி: உதகை எச்.பி.எப்.(HPF) பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் உதகையில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பில் மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது.

உயிர்வேதியியல், உடல் கூறியல் பிரிவு, உடலியல் பிரிவு, நூலகப் பிரிவு, நோயியல் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல், உயர் தொழில்நுட்ப பரிசோதனை மையம் போன்ற சிறப்பு சிகிச்சை மையங்கள் புதிய மருத்துவ கட்டிடத்தில் இடம்பெறும். மேலும், முதல்வர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, மாணவ-மாணவிகள் விடுதி போன்ற குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

இவை அனைத்தும் 3 வளாகங்களாக அமைய உள்ளது. மருத்துவமனை வளாகம் 8 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறைகள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்களுக்காக 1200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், 108 வாகன கட்டுபாட்டு அறை உள்ளிட்டவை அடங்கும். இந்த மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...