காரமடை கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6-மணி முதல் இரவு 9-மணி வரை மட்டுமே அனுமதி

வைகுண்ட ஏகாதசியான வரும் 13 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி, வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிப்பு.


கோவை: 2-டோஸ் தடுப்பூசி சான்று, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைப் பக்தர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கலந்தாய்வுக் கூட்டமானது கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



இக்கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வரும் 13 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி, வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், திருக்கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் கிருஷ்ணன், ஜெகநாதன், ஆனந்தராஜ், கட்டேமனை கவுண்டர் ரங்கராஜ், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...