கோவையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த ரயில் விபத்து: இருவர் பலி

போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: கோவையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த ரயில் விபத்தில் இருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் ரயில்வே தண்டவாளம் கோவை ரயில் நிலையம் நடை மேடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்ததாகக் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலைச் சோதனை செய்தனர்.

பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று கோவை பீளமேடு ரயில்வே தண்டவாளம் சாய்பாபா கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...