வரி வசூலை மேம்படுத்த கோவை மாநகராட்சி பிரச்சாரம்..!!

நடப்பு ஆண்டில் ரூபாய் 206.02 வரி வசூல் செய்யவேண்டிய இடத்தில், இதுவரை ரூபாய் 108.79 கோடி பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரி வசூலை மேம்படுத்த விழிப்புணர்வு வாகனங்களைப் பயன்படுத்தி, பிரச்சாரத்தை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.


கோவை: 2021-22க்கான நிதியாண்டு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், சொத்து வரி வசூலை மேம்படுத்த கோவை மாநகராட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி நிலவரப்படி, மாநகராட்சியில் 53 சதவீதம் வரி வசூல் செய்யபட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூபாய் 206.02 வரி வசூல் செய்யவேண்டிய இடத்தில், இதுவரை ரூபாய் 108.79 கோடி, கோவை மாநகராட்சி வசூலித்துள்ளது. இந்த நிலையில், வரி வசூலை மேம்படுத்தவும், வரி செலுத்தவும், சொத்து வரி செலுத்துவதற்கு வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு வாகனங்களைப் பயன்படுத்தி, பிரச்சாரத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, பில் கலெக்டர்களை சந்தித்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலை, மாநகராட்சி தயாரித்து வருகின்றது. வரி பாக்கி ரூபாய் 167.27 கோடியாகவும், நிலுவைத் தொகை ரூபாய் 53.31 கோடியாக உள்ளது. நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய, மக்கள் மத்தியில் பிரச்சாரம் மூலம் கோவை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.

இதனிடையே, சொத்துவரி கோரிக்கை பட்டியலை ஆய்வு செய்யும் பணியை மாநகராட்சி சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. நவம்பர் 30, 2021 நடந்த கூட்டத்தில், மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் 8,000 க்கும் மேற்பட்ட சொத்து வரி செலுத்தாத கட்டிடங்கள் இடிக்கப்பட்டது என்றும் மேலும், கண்டுபிடிக்க முடியாத சொத்து போன்றவற்றை நீக்க முடிவு செய்துள்ளதாகக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஐந்து மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் அத்தகைய மதிப்பீடுகளை அடையாளம் காண வீடு வீடாகச் சென்று பட்டியலைக் தயாரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. மதிப்பீட்டின் கீழ் வசூலிக்க வேண்டிய பணம் ரூபாய் 13.12 கோடி என்று மதிப்பீடு செய்யபட்டுள்ளது, என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...