பொள்ளாச்சியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் சிலையை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில், பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தந்தை பெரியார் சிலையை அவமதித்த சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் சிலைக்குக் காவி பொடி வீசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்ம கும்பல் அவமரியாதை செய்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகப் பெரியார் சிலையை அவமதித்த செயலை கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் விடுதலை முன்னணி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பெரியார் சிலையை அவமதிப்பு செய்து வருகிறார்கள். இவர்களுக்கு காவல்துறையும் நீதிமன்றமும் துணை போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பெரியார் சிலையை அவமதித்த வரிகளே இது கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...