கோவையில் 15-முதல் 18-வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி

கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, சங்கனூர்‌, நல்லாம்பாளையம்‌ பகுதியிலுள்ள அம்ரிதா வித்யாலயா பள்ளியில்‌ 15-வயது முதல்‌ 18- வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, சங்கனூர்‌, நல்லாம்பாளையம்‌ பகுதியிலுள்ள அம்ரிதா வித்யாலயா பள்ளியில்‌ 15 வயது முதல்‌ 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



மேலும், தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.92க்குட்பட்ட பி.கே.புதூர்‌ பிரதான சாலை பகுதியில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.62 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



மேலும், மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.45க்குட்பட்ட பெரியசாமி லே அவுட்‌ வீதியில்‌ முன் களப்பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல்‌, இருமல்‌ பரிசோதனை, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர்‌ மூலம்‌ உடல்‌ ஆக்சிஜன்‌ அளவை கண்டறிதல்‌ ஆகிய பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86 கரும்புக்கடை பகுதியில்‌ உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மைய வளாகத்தில்‌ பேவர்‌ பிளாக்‌ கற்கள்‌ கொண்டு நடைபாதை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



மேலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ டி.வி.சாமி ரோடு பகுதியில்‌ பாதசாரிகள்‌ நடைபாதை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...