பொள்ளாச்சி அருகே தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி தர்ணா..!

தலித் இளைஞரை மாற்று சமூகத்தைச் சேர்ந்த மேஜர் ராமசாமி தூண்டுதலின் பேரில், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கை, கால்களை கட்டி போட்டு கண்மூடித்தனமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி, பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தை பல்வேறு இயக்கங்கள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மக்கள் சக்தி நகரை சேர்ந்த 21 வயது இளைஞர் ஹரிஹரசுதாகர் என்பவர் அப்பகுதியில் உள்ள மேஜர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் சம்பள பிரச்சனை காரணமாக கடந்த சில வாரங்களாக அங்கு பணிக்குச் செல்லவில்லை என தெரிகிறது. இவர் பணியாற்றும் தோட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹரிஹர சுதாகர் காதலித்து வந்த பெண்ணை பார்க்க நேற்று முன்தினம் அங்கு சென்றபோது, மேஜர் ராமசாமியின் தோட்டத்தில் வேலை பார்க்கும் சிலர், ஹரிஹரசுதாகரின் கை கால்களை கட்டி போட்டு அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ஹரிஹரசுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் மேஜர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.



எனவே, இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் பாதிக்கப்பட்ட ஹரிஹரசுதாகர் உறவினர்கள் உள்ளிட்டோர் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், ஆனைமலை காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலித் இளைஞர் ஹரிஹரசுதாகர்மாற்று சமூகத்தைச் சேர்ந்த மேஜர் ராமசாமி தூண்டுதலின் பேரில் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கை, கால்களை கட்டி போட்டு கண்மூடித்தனமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

ஆனால், இதற்கு காரணமான மேஜர் ராமசாமி மீது ஆனைமலை காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை, எனவே, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...