பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பிலான கோயில் நிலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்பு..!

மேலும், அந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பிலான கோயில் நிலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அங்காளம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது.

சுமார் 40 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பல்லடம் கரையான்புதூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், சேதுராமலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து 30 வருட காலமாக கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த இந்து அறநிலையதுறை இணை ஆணையர் ஜெயசந்திரன் இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்படி நபர்களை ஆக்கிரமிப்பு தார்களாகக் கருதி நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்திட திருப்பூர் இணை ஆணையருக்கு உத்தரவு வழங்கியது.



இதனையடுத்து, இன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ், நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் காவல்துறையினரால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...