தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி அருகே தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு. அத்தியாவசிய பொருட்கள் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.


கோவை: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகளவில் பரவி வரும் நிலையில்தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகம் எல்லை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் மற்றும் நடுப்புணி என ஏழு சோதனை சாவடி உள்ளது. இந்த ஏழு எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.



அத்தியாவசிய பொருட்கள் உள்ள வாகனங்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள் உரிய அடையாள அட்டை காண்பிக்கப்பட்டால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் மற்ற வாகனங்களை எல்லைகள் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

அதேபோல் கேரள மாநிலத்திலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.தற்போது ஊரடங்கு என்பது முழுமையாககடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...