கோவையில் 92-ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

பள்ளி செல்லாத குழந்தைகளுக்குச் சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 92-ஆயிரத்து 453-மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் 92-ஆயிரத்து 453-பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15-முதல் 18-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கேச் சென்று மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவிர ஆா்.பி.எஸ்.கே. குழு மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6- நாள்களில் 92-ஆயிரத்து 453-பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 15-முதல் 18-வயதுக்குட்பட்ட 1.61-லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். மருத்துவக் குழுவினர் பள்ளிகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பள்ளி செல்லாத குழந்தைகளுக்குச் சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 92-ஆயிரத்து 453-மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...