கொரோனா விதிகளை மீறியதாக, கோவை மாவட்டத்தில் 3-நாள்களில் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கொரோனா விதிகளை மீறியதாக, கோவை மாவட்டத்தில் 3-நாள்களில் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் 41-இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையில் தேவையின்றி சுற்றித்திரிபவா்கள்,கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க 10-நான்கு சக்கர வாகனங்களும், 61-இருசக்கர வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13-சோதனைச் சாவடிகளிலும், 2-தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 48-மணி நேரத்துக்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கோவை மாவட்டத்தில் சுமார் 500-காவலர்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும்கொரோனா வழிகாட்டுதலை மீறியவர்கள் என கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 3-நாள்களில் மட்டும் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.