கோவையில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் கைவரிசை காட்டிய வேலைக்காரப் பெண் கைது..!

புகாரின் பேரில், இரண்டு வீடுகளில் திருடப்பட்ட 22 சவரன் நகையை மீட்ட போலீசார், அந்த பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் வேலை செய்த வீடுகளில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சாய்பாபா காலனியை அடுத்த கோவில் பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்கு பெருமாள் என்பவரின் மகன் பிரசாந்த் (29) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் வீட்டில் உள்ள மற்ற பீரோக்கள் முழுவதும் தேடி பார்த்தனர். நகை எங்கும் இல்லாததால் பிரசாந்த் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரில் தங்களது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் சூர்யா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பணிபுரிந்து வந்த இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரபு என்பவரின் மனைவி சூர்யா (30) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பிரசாந்த் வீட்டில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடி வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, அதே அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் ராமமூர்த்தி என்பவரின் மகன் விசுவநாத் (42) என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது அவரது வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து அவரது வீட்டிலும் பணிபுரிந்த சூரியாவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் சூர்யா தற்போது சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து விஸ்வநாதன் அந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்தினார்.

இந்நிலையில், பிரசாந்த் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை அடுத்து விஸ்வநாத் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் பிரசாந்த் வீட்டில் கைவரிசை காட்டி 12 பவுன் நகைகளை திருடிய சூர்யா என்ற வீட்டு வேலைக்கார பெண் தான் விஸ்வநாத் வீட்டிலும் 10 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வேலைக்கார பெண் சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...