கோவையில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று கார் வாங்கி மோசடி செய்த நபருக்கு போலீசார் வலைவீச்சு..!

மேலும், அந்த காரை முறைப்படி பதிவு செய்யாமல் போலி எண்ணை காரில் பொருத்தி ஓட்டி வந்துள்ளார்.


கோவை: கோவையில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று கார் வாங்கி மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை காளப்பட்டி ரோடு நேரு நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல மேலாளர் இன்பராசா (46) என்பவர் பீளமேடு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த 2016ம் ஆண்டு பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் போலி ஆவணங்களை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் வங்கியிலிருந்து கடனாக வாங்கி உள்ளார். அந்த பணத்தை வைத்து சேலத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார்.

மேலும் அந்த காரை முறைப்படி பதிவு செய்யாமல் போலி எண்ணை காரில் பொருத்தி ஓட்டி வந்துள்ளார். மேலும் வங்கியில் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை வங்கியிலிருந்து தொடர்பு கொண்ட போதும் சரியான பதிலளிக்காமல் இருந்து வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் கார்த்திக் என்பவர் மீது போலியான ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று கார் வாங்கியதாகவும், பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...