கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் 5 பேரிடம் போலீசார் விசாரணை..!

குற்றம் சாட்டப்பட்ட திபு, ஜம்ஷீர் அலி, சதீஸன், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 5 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 5 பேரிடம் கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கொடநாடு வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட திபு, ஜம்ஷீர் அலி, சதீஸன், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 5 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துச்சாமி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் தனிப்படை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் விசாரணை நடைபெறும் கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்துள்ளார். வழக்கு தொடர்பாக தற்போது வரை 150 பேரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள 12 பேரில் விபத்தில் பலியான கனகராஜ் உறவினர்களான சேலத்தை சேர்ந்த தனபால், ரமேஷ் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

மேலும், மீதமுள்ள 9 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...