வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பில் தீ விபத்து - 7 வீடுகள் எரிந்து சேதம்..!

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் மக்கள் எவ்வித பாதிப்பு இன்றி தப்பினர். தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமானது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரவு சுமார் 10.45 மணி அளவில் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில் நடராஜன் என்பவர் வீட்டில் மின் கசிந்து தீ பிடித்துள்ளது. தீ பிடித்து புகை வந்ததால் வீட்டிலிருந்தவர்கள் வீட்டை வீட்டு வெளியேறினர்.

இதையடுத்து, சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்தனர்.



தீ அணையாமல் அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கு தீப்பிடித்து எரிய தொடங்கியது.



வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.



சிறிது நேரத்திற்குள் ராஜேந்திரன், நடராஜ், சுரேஷ், கனகா, நஞ்சன் அலி, நஜிமுத்தி, மாலா உசேன் ஆகியோரின் 7 வீட்டிற்கு தீ பரவியது.



பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களுமே முற்றிலும் சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த டிவி, கட்டில், சமையல் பொருள், துணிமணிகள் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவைகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



தீ பிடித்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...